தெற்கு கள்ளிகுளம்

தெற்கு கள்ளிகுளம்

புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

தெற்கு கள்ளிகுளம்

பொதுவாக கரையோரக் கிராமங்கள் என்றாலே நம் கவிதையைப் போல் நமது கண்களுக்கும் கருத்துக்களுக்கும் இன்பமளிக்கும்

     அணிவகுத்து நிற்கும் தென்னையும், அதனருகே தாழையும், புன்னையும், நிமிர்ந்து நிற்கும் பனையும் அதன் காலடியில் வந்து திரும்பும் அலைகளும் ஆங்காங்கே அலைந்து திரிந்துகொண்டிருக்கும் நாரைகளும், கொக்குகளும், பரந்து விரிந்து கிடக்கும் நெய்தல் முத்து மணிகள் போன்ற பெரு, சிறு, குறு, மணல் பரப்பை விட்டு வணிகநோக்கோடு புலம் பெயர்ந்த நம் பரவர் மக்கள், தென் தமிழக கிழக்கு கடற்கரை கிராமங்களான கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குளி, ஆகிய ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்து அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தேரை குளம் என்று பதிவு செய்யப்பட்ட இப்போதைய தெற்கு கள்ளிகுளம் கிராமத்தின் மேற்குப் பகுதியில் குடியேறினர். பக்தியிலும், ஒழுக்கத்திலும் சிறந்த நம் மக்கள் தம்மைப் பாதுகாக்க புனித மிக்கேல் அதிதூதர் சம்மனசு நம் அருகில் இருக்க வேண்டும் என்று எண்ணி, புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் கட்டத் தீர்மானித்து, அப்போதைய குருவானவர்  சங். பத்திநாத சுவாமியிடம் தெருவித்தனர். சுவாமியின் உதவியால் சவரிமுத்து நாடார் அவர்களிடமிருந்து நம் பரவர் மக்கள் தங்கள் பணத்தைக் கொடுத்து இடத்தை வாங்கி, அவ்விடத்தில்                          (சர்வே எண் 27 ) 25.01.1889ல் ஆலயம் காட்டுகின்றனர். புனிதர் வீதிகள் வழியாக வந்து தம்மக்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கும் படி மிக அழகான தேரை செய்து, தேரைப் பாதுகாக்க தேர்ப்பிறையும் கட்டப்பட்டது .

        இதைத் தொடந்து நம் பரவர் மக்கள் வழிவழியாய் வாழையடி வாழையாய் நம் முன்னோர்கள் இட்டுச் சென்ற பாதையில் செப்டம்பர் 20ம் தேதிக் கொடியேற்றி, 29 ல் 10ம் திருவிழா என்று பத்து நாட்களும் திருவிழாவை மிகசிறப்பாகக்கொண்டடி வருகிறார்கள். அதிலும் மிகவும் ஆடம்பரமாக 1987ம் ஆண்டு நூற்றாண்டு விழாவும், 2011ம் ஆண்டு 125ம் வருட திருவிழாக்களை  புனித மிக்கேல் அதிதூதர் ஐயாவுக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு மக்களுக்கு அளப்பரிய ஆனந்தத்தையும், எல்லையில்லா மகிழ்ச்சியையும் அளித்துக்கொண்டிருக்கிறது.

       புனித மிக்கேல் அதிதூதர் 150வது  விழாவை சீரும் சிறப்புமாகக் கொண்டாட நம் பரவர் மக்கள் மிகவும் ஆவலோடு எதிர்கொண்டு இருக்கிறார்கள். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர் தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவார் (தி.பா.34:7) என்ற இறைவாக்கு நம் பரவர் மக்கள் மென்மேலும் வாழ்விலும் வளத்திலும் முன்னேறிச் செல்லவும், அவர்களின் உற்ற பாதுகாவலராக விளங்கிடவும் நம் பாதுகாவலராம் அதிதூதர் புனித மிக்கேல் சம்மனசானவரின் வழியாக எல்லாம் வல்ல ஆண்டவரை நம்முடன் பயணித்து நமது அனைத்து தேவைகளையும், நல்ல உடல் நலத்தையும் தரவேண்டி இத் திருவிழா மூலமாக வேண்டிக்கொள்வோம்.

ரூ. மைக்கிள் பயஸ் கோஸ்தா

வள்ளியூர்

9080276600 – 9176101999

 

 

தகவல் உதவி தர்மகர்த்தா : J . இந்திரா பேலிக்ஸ் வில்வராயர் 

[ngg_images source=”galleries” container_ids=”12″ display_type=”photocrati-nextgen_basic_slideshow” gallery_width=”500″ gallery_height=”400″ cycle_effect=”fade” cycle_interval=”10″ show_thumbnail_link=”1″ thumbnail_link_text=”[Show thumbnails]” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]