படைப்புக்கள்

அன்னையை போற்றிட ஒரு மாதம்

அன்றாடம் செபிக்க

அனுதினமும் சிந்திக்க

அன்னையின் வாழ்நிகழ்வை உணர்ந்திட

அக்கறையாக தியானித்திட

அனைவரும் ஒன்றித்திட

அருமையான தாயுறவில் மகிழ

அந்நியப் படாமல் இருந்திட

அன்பியமாய் ஒன்று கூடிட

அஞ்சிடும் செயலெல்லாம் தீர்வாகிட

அபயம் தேடிடும் மனம் மாறிட

அடைக்கலம் நாடியே ஐக்கியமாக

அற்புதமாய் மனம் விரும்பிட

அன்னையின் அருகில் அமர

அன்னைக்கு ஒரு பாமாலை சூட்ட

அன்னை மரியின் மகிமை போற்றிட

அன்னைக்கு நன்றி பகர

அன்னையோடு பயணிக்க

அன்னையே எல்லாமென உணர

அணி அணியாய் சேர்ந்திட

அத்தனை உறவும் சேர்ந்து வணங்கிட

அன்னைக்கென இணைந்திட

அன்னையும் நாமும் ஓர் மனமாகிட

அன்னையே என்போர் நம்பிட

அன்னை நம்மில் நடுநாயகமாகிட

அக்டோபர் மாதம் வந்தது

செபமாலை பலம் தந்தது

செபிப்போம் பக்தியாய்

நிற்போம் சக்தியாய்…..,

 

 

அன்புடன்,

கஸ்மீர் ரோச்,

உவரி 

9382709007