எங்களைப் பற்றி

1990 ம் வருடம் முதல் சென்னையில் வாழ்ந்த இன உணர்வு கொண்ட பரவர் குல இளைஞர்கள் சிலர் அடிக்கடி கூடி சென்னையில் நமது இனத்திற்கென்று இன நல சேவை நோக்கத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பை உருவாக்க வேண்டுமென்று தங்கள் தாகத்தை செயல் வடிவாக்க பெரும் முயற்சி மேற்கொண்டார்கள். அவர்களின் முயற்சியின் முதல் செயல்பாடக 1992 ம் ஆண்டு அன்றைய காலக்கட்டத்தில் நம் இனத்தவருக்கு சொந்தமான “ஹோட்டல் ஸ்ரீ கலா” என்ற ஹோட்டலில் சுமார் 15 இளைஞர்கள் ஓன்று கூடி சென்னையில் நம் இனத்தவர்களை ஒன்றிணைத்து ஒரு சங்கத்தை உருவாக்க முடிவெடுத்தார்கள்.அந்த அமைப்புக்கு “பரவர் இளைஞர் நல பேரவை” என பெயர் சூட்டப்பட்டது .1993 ஆண்டு இந்த அமைப்பு முறைப்படி பதிவு செய்யப்பட்டது. இந்த அமைப்பின் முதல் ஆண்டு விழா 04.09.1997 அன்று சென்னை சூசைபுரம் புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் பேரவையின் ஆண்டு விழா நமது சமுதாய முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

1997 ல் இந்த பேரவையில் நம் இன மக்கள் அனைவரும் வயது வரம்பின்றி இணைந்து இந்த பேரவையினை முன்னெடுத்து செல்ல வசதியாக முறைப்படுத்தப்பட்டு “பரவர் நல பேரவை” என்று 17.08.1997 அன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றளவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் மூலமாக நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அமைப்பு சிறிய முறையில் செயலாற்றி நம் சமுதய மக்களின் கல்வி மேம்பாட்டுக்கும்

நம் சமுதாய மக்களின் திருமணங்கள் நடந்தேற மணமக்களை அறிமுகம் செய்யும் நற்பணியை ஆற்றிட “திருமணத் தகவல்” மையம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.நமது சமுதாய கிராமங்களின் நிகழ்ச்சிகளை பறை சாற்றிடவும் சமுதாய ஒற்றுமையை வளர்த்திடவும் நம்மவர்களின் எழுத்தாற்றலை வெளிக் கொணர்ந்து அனைவரும் அறியச்செய்யும் நோக்குடன் “பரதர் மலர்” இரண்டு மாதத்திற்கு ஒரு இதழாக “பரதர் மலர “என்ற வெளியிடப்பட்டு வந்தது.அதன் பின் தற்போது மாதம் தோறும்” பரதர் மலர் “வெளியாகி வருகிறது.இந்த மலர் வெளிவரும் கட்டுரைகள் மூலமகவும் திருமணத்தகவல் என்ற மையத்தின் தகவல்கள் மூலமாகவும் ஆண்டுவிழாக்களில் சிறந்த மாணவர்களை ஊக்கத்தொகைகள் வழங்குவதன் மூலமாக உற்சாகப்படுத்தியும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த பரவர் நலப் பேரவையினை நம் இன மக்கள் பயன்படுத்தி பயன்பெற உங்களை தொட ்ந்து உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் இந்த பேரவை இருகரம் கூப்பி வேண்டுகிறது.இந்த பேரவையின் கடந்த 23 ஆண்டு கால வளர்ச்சிகள் பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் அதற்காக உழைத்த நல்ல உள்ளங்கள் பற்றிய விபரங்கள் இனிவரும் நாட்களில் நீங்கள் அறிய வசதியாக இந்த பகுதியில் மேலும் பல தகவல்களை பதிவு செய்வோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

20.09.2017 வரை ஊர்வாரியாக ஆயுட்கால உறுப்பினர்கள்   & கௌரவ  ஆயுட்கால உறுப்பினர்கள்

1. ஆலந்தலை

2. அமலி நகர்

3. அந்தோனியார் புரம் ( புதுக்கோட்டை மாவட்டம் ) 

4. ஆரல்வாய்மொழி

5. ஆறுமுகநேரி

6. அதிசயபுரம் 

7. ஆத்தூர்

8. அழகப்பபுரம்

9. சென்னை 

10. குளச்சல்

11. ஏரல்

12. ஏர்வாடி

13. இடிந்தகரை

14. கள்ளிகுளம் 

15. கமுதி

16. கன்னியாகுமரி 

17. கருங்குளம் 

18. காவல்கிணறு

19.  கீழக்கரை

20. கீழவைப்பார்

21. கேசவன் புத்தன் துறை 

22. கொல்லம் ( கேரளா)

23. கூடுதாழை

24. கூட்டப்புளி 

25. கூத்தன்குழி

26. கூட்டப்பனை 

27. கொற்கை

28. கோவளம்

29. குரும்பூர்

30. மதுரை 

31. மலையன்குளம்

32. மணக்கரை

33. மயிலாடுதுறை

34. மணப்பாடு

35. மைலாடி

36. மூக்கையூர்

37. முக்காணி

38. முட்டம் 

39. முத்துபேட்டை

40. நாகப்பட்டினம்

41. நாகர்கோயில் 

42. பாளையங்கோட்டை

43. பாம்பன்

44. பணகுடி 

45. பஞ்சல் 

46. பழையகாயல்

47. பெரியகாடு 

48. பெரியதாழை

49. பெருமணல்

50. பேட்டை

51. பிள்ளைதோப்பு

52. பொட்டல் புதூர் 

53. பொழிக்கரை

54. புன்னைக்காயல் 

55. புறையூர்

56. புத்தன்துறை

57. ராஜாக்க மங்கலம் துறை

58. இராமநாதபுரம்

59. சாலைகிராமம் ( சிவகங்கை மாவட்டம்)

60. சேந்த மங்கலம்

61. சேதுக்கு வாய்த்தான்

62. செய்துங்கநல்லூர்

63. சிப்பிகுளம்

64.  சோமநாத பேரி

65. சுசீந்திரம்

66. சுரண்டை

67. திருநெல்வேலி

68. தங்கச்சி மடம்

69. தூத்துக்குடி

70. உடன்குடி

71. உவரி

72. வடக்கன் குளம் 

73. வள்ளியூர்

74. வீர பாண்டியன் பட்டினம் 

75. வீரவ நல்லூர்

76. வேம்பார்

77. வேப்பலோடை

78. விஜய நாராயணம் ( தெற்கு)

79. விக்கிரம சிங்க புரம்