எங்களை பற்றி

1990-ம் வருடம் முதல் சென்னையில் வாழ்ந்த இன உணர்வு கொண்ட பரவர் குல இளைஞர்கள் சிலர் அடிக்கடி கூடி சென்னையில் நமது இனத்திற்கென்று இன நல சேவை நோக்கத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பை உருவாக்க வேண்டுமென்று தங்கள் தாகத்தை செயல் வடிவாக்க பெரும் முயற்சி மேற்கொண்டார்கள்…

Official Logo

ADVERTISEMENTS

பரவர் மலர்

எங்களைப் பற்றி :-

1990-ம் வருடம் முதல் சென்னையில் வாழ்ந்த இன உணர்வு கொண்ட பரவர் குல இளைஞர்கள் சிலர் அடிக்கடி கூடி சென்னையில் நமது இனத்திற்கென்று இன நல சேவை நோக்கத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பை உருவாக்க வேண்டுமென்று தங்கள் தாகத்தை செயல் வடிவாக்க பெரும் முயற்சி மேற்கொண்டார்கள். அவர்களின் முயற்சியின் முதல் செயல்பாடக 1992ம் ஆண்டு அன்றைய காலக்கட்டத்தில் நம் இனத்தவருக்கு சொந்தமான “ஹோட்டல் ஸ்ரீ கலா” என்ற ஹோட்டலில் சுமார் 15 இளைஞர்கள் ஓன்று கூடி சென்னையில் நம் இனத்தவர்களை ஒன்றிணைத்து ஒரு சங்கத்தை உருவாக்க முடிவெடுத்தார்கள்.அந்த அமைப்புக்கு “பரவர் இளைஞர் நல பேரவை” என பெயர் சூட்டப்பட்டது.1993 ஆண்டு இந்த அமைப்பு முறைப்படி பதிவு செய்யப்பட்டது.
இந்த அமைப்பின் முதல் ஆண்டு விழா 04.09.1997 அன்று சென்னை சூசைபுரம் புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் பேரவையின் ஆண்டு விழா நமது சமுதாய முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
1997-ல் இந்த பேரவையில் நம் இன மக்கள் அனைவரும் வயது வரம்பின்றி இணைந்து இந்த பேரவையினை முன்னெடுத்து செல்ல வசதியாக முறைப்படுத்தப்பட்டு “பரவர் நல பேரவை” என்று 17.08.1997 அன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றளவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் மூலமாக நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அமைப்பு சிறிய முறையில் செயலாற்றி நம் சமுதய மக்களின் கல்வி மேம்பாட்டுக்கும் நம் சமுதாய மக்களின் திருமணங்கள் நடந்தேற மணமக்களை அறிமுகம் செய்யும் நற்பணியை ஆற்றிட “திருமணத் தகவல்” மையம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.நமது சமுதாய கிராமங்களின் நிகழ்ச்சிகளை பறை சாற்றிடவும் சமுதாய ஒற்றுமையை வளர்த்திடவும் நம்மவர்களின் எழுத்தாற்றலை வெளிக் கொணர்ந்து அனைவரும் அறியச்செய்யும் நோக்குடன் “பரதர் மலர்” இரண்டு மாதத்திற்கு ஒரு இதழாக “பரதர் மலர்” என்ற வெளியிடப்பட்டு வந்தது.அதன் பின் தற்போது மாதம் தோறும் “பரதர் மலர்” வெளியாகி வருகிறது.இந்த மலர் வெளிவரும் கட்டுரைகள் மூலமகவும் திருமணத்தகவல் என்ற மையத்தின் தகவல்கள் மூலமாகவும் ஆண்டுவிழாக்களில் சிறந்த மாணவர்களை ஊக்கத்தொகைகள் வழங்குவதன் மூலமாக உற்சாகப்படுத்தியும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த பரவர் நலப் பேரவையினை நம் இன மக்கள் பயன்படுத்தி பயன்பெற உங்களை தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் இந்த பேரவை இருகரம் கூப்பி வேண்டுகிறது.இந்த பேரவையின் கடந்த 23 ஆண்டு கால வளர்ச்சிகள் பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் அதற்காக உழைத்த நல்ல உள்ளங்கள் பற்றிய விபரங்கள் இனிவரும் நாட்களில் நீங்கள் அறிய வசதியாக இந்த பகுதியில் மேலும் பல தகவல்களை பதிவு செய்வோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.